Our Feeds


Thursday, February 15, 2024

SHAHNI RAMEES

வெறும் நான்கு யுனிட்கள் பாவித்த வீட்டிற்கு 75000 ரூபாவிற்கு பில் வழங்கிய வோட்டர் போர்ட்...

 

மாதாந்தம் ஏறக்குறைய ஆயிரம் ரூபா தண்ணீர்க் கட்டணமாக இருந்த ஹுங்கம பகுதியில் உள்ள வீடொன்றுக்கு கடந்த மாதம் 75,000 ரூபா நீர்க் கட்டணம் கிடைத்ததாக வீட்டு உரிமையாளர் டபிள்யூ.எச். கருணாவதி என்ற பெண் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தனியார் பத்திரிகை ஒன்று அவரிடம் வினவிய போது, குளிப்பதற்கும், குடிப்பதற்கும் மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், அதற்கு 4 யுனிட் மட்டுமே செலவாகும் என்றும், நீர் கட்டண அதிகரிப்பிற்கு பின்னரும் ஏறக்குறைய ரூ.1,000 தான் தமக்கு நீர் கட்டணமாக வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. கடந்த 11ம் திகதி நீர் கட்டணப் பட்டியல் எழுதுபவர் வீட்டிற்கு வந்து நீர் கட்டண பட்டியலை கொடுத்தார். நீர் கட்டண பட்டியல் 75,000 ரூபாய் என்பதை அறிந்ததும் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.

நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், நாங்கள் கூலித் தொழிலாளிகளாக வாழ்கிறோம், எங்களுக்கு வீடு வாசல் இல்லை. குடிநீர் கட்டணத்தில் 800 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன..”


ஹங்கம ஹதகல நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பராமரிப்பு அலுவலகத்தில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார். இதுபற்றி பொறுப்பதிகாரியிடம் கேட்டபோது, ​​முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த நேரில் வீட்டுக்குச் செல்வதாக தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »