அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்றவர்களை நியமித்ததன் மூலமே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
6 மாதங்களாக முயற்சி செய்தும், அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை, எனவே இந்த சுயாதீன ஆணைக்குழு உருவாக்கப்பட்டாலும், ஓய்வு பெற்றவர்கள் இல்லாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் குறிப்பிட்டார்.