Our Feeds


Saturday, February 10, 2024

Anonymous

என்னுடன் தான் பேச வேண்டும். கட்சி MPக்களுடன் பேச வேண்டாம் - ஹரீஸ், இஷாக், பைசல் காசிம் ஜனாதிபதி சந்திப்புக்கு ஹக்கீம் காட்டம்.

 



(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)


எதிர்க்­கட்­சி­களின் ஒத்­து­ழைப்பு வேண்­டு­மாயின் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­டனும், அர­சியல் கட்சித் தலை­வர்­க­ளு­டனும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட வேண்டும். அதனை விடுத்து கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுடன் தனிப்­பட்ட முறையில் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­வது ஜனா­தி­ப­தியின் சிரேஷ்­டத்­து­வத்­துக்கு பொருத்­த­மற்­றது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.


பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஜனா­தி­ப­தியின் கொள்கை பிர­க­டன உரையின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.


அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது, பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்வு காண அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என ஜனா­தி­பதி உண்மை நோக்­கத்­துடன் அறி­விக்க வேண்டும் அப்­போது தான் நம்­பிக்கை ஏற்­படும்.அர­சியல் கட்­சி­களின் உறுப்­பி­னர்­களை ஆளும் தரப்­புக்குள் இணைத்து அவர்­க­ளுக்கு அமைச்சு பத­வி­களை வழங்­கினால் எவ்­வாறு நம்­பிக்கை தோற்றம் பெறும்.


எமது கட்­சியின் உறுப்­பினர் ஒரு­வரை ஆளும் தரப்­புக்குள் வர­வ­ழைத்து அவ­ருக்கு அமைச்சு பதவி வழங்­கினார்.நீதி­மன்ற உத்­த­ரவை தொடர்ந்து அவ­ரது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி கூட பறி­போ­னது. ஆகவே கட்­சி­களின் உறுப்­பி­னர்­க­ளுடன் தனிப்­பட்ட முறையில் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டாமல் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­டனும், ஏனைய அர­சியல் கட்சி தலை­வர்­க­ளு­டனும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட வேண்டும்.


அர­சியல் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டாமல் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடுபட்டு ‘எமது அரசாங்கத்தில் அனைவரும் உள்ளார்கள்’ என்ற விம்பத்தை சர்வதேசத்துக்கு காண்பிக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். இது அவரது அரசியல் சிரேஷ்டத்துவத்துக்கு பொருத்தமற்றது என்றார். – Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »