76 ஆவது சுதந்திர தின நிகழ்வு
இலங்கை தாய் நாட்டின் 76 ஆவது சுதந்திர நிகழ்வு இன்று காலை
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில்
கல்லூரி வளாகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேற்படி நிகழ்வின் மிக முக்கியமான அம்சமாக தேசிய தின உரை, சுதந்திர தின நிகழ்வு தொடர்பான நாடகம் என்பன நடைபெற்றதுடன்
மாதம்பை வைத்தியசாலை நிர்வாகத்துடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைத்திய சாலையையின் சுற்றுச்சூழலை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.