Our Feeds


Saturday, February 10, 2024

ShortNews Admin

PHOTOS: தெஹிதெனிய, முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு Happy to Learn திட்டத்தின் மூலம் கல்வி உபகரணங்கள் அன்பளிப்பு.





பொருளாதார பிரச்சினைகளினால் பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ள கஷ்டப்படும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்கும் “மனிதநேய மக்கள் அமைப்பின்” Happy to Learn திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக கண்டி மாவட்டம் தெஹிதெனிய, முஸ்லிம் மகா வித்தியாலயம் - ஹதரலியத்த மாணவர்ளுக்கான உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சதகதுல் ஜாரியா எனும் நிரந்தர தர்மத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அன்பு சகோதரர்கள் பலர் செய்த உதவியின் மூலம் இந்த பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. - அல்ஹம்து லில்லாஹ்.

07.02.2024 அன்று பாடசாலை அரங்கத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட நிகழ்வில் “கல்விக்கான நமது பங்களிப்பு” என்ற தலைப்பில் சகோதரர் ரஸ்மின் MISc சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் தேவையுடைய மாணவர்களுக்கான காலணிகள் - Shoe, அப்பியாசப் புத்தகங்கள் (Exercise Book), மற்றும் பேக் - (School Bag) உள்ளிட்ட சுமார் 6 லட்சங்கள் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்த பொருட்களை வழங்குவதற்கு தமது பொருளாதாரத்தின் மூலம் உதவி புரியும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் முழுமையான கூலியையும், நற்பாக்கியத்தையும் வழங்குவானாக என ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.













Subscribe to this Blog via Email :
Previous
Next Post »