Our Feeds


Saturday, March 16, 2024

ShortNews Admin

5ஆவது முறையாக ஜனாதிபதியாகும் புட்டின்.


ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தல் இன்றும், நாளையும் நடக்கிறது. உக்ரைனுடான போருக்கு மத்தியில் ரஷ்யா முழுவதிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


நாடு முழுவதும் 1 இலட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஜனாதிபதித் தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.


இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. ஜனாதிபதி புட்டின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்திலுள்ளன. வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாததால் புட்டின் 5ஆவது முறையாக ஜனாதிபதியாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 5ஆவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் பேர் புட்டினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புட்டின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக சுமார் 20 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »