Our Feeds


Monday, March 18, 2024

SHAHNI RAMEES

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல் - புட்டின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி

 

ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் முடிவுகள் இன்று (18) வெளியாகும் என தெரிகிறது.



இந்நிலையில் நேற்று நடைபெற்ற ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.



வரும் மே மாதம் 7ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஜனாதிபதியின் பதவிக் காலமும் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புட்டின் பிரதமராக இருந்த போது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »