அம்பாறை பெரிய நீலாவணை - பாக்கியதுஸ் சாலிஹாத் வீதியில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் இரு சடலங்கள் மீட்கப்பட்டதாக பெரிய நீலாவணை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று(14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் சகோதரன் மற்றும் சகோதரியின் சடலங்கள் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளன.
மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 63 வயதான முஹம்மது மிர்சா முகமது கலீல் தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்