Our Feeds


Sunday, March 24, 2024

SHAHNI RAMEES

இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு ஒப்பந்தம் கைச்சாது

 

இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் எனவும், இவை ஒருபோதும் எனது தனிப்பட்ட இலாபத்துக்காக பயன்படுத்தப்படாது என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டை முதன்மைப்படுத்தி, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவை வலுப்படுத்துவதே எமது நோக்கம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.


ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் ஏழாவது நிகழ்வு நேற்று (22) மாத்தளையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்தை கூறினார்.

இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட வேலை வாய்ப்புகளை நாடு முழுவதும் வழங்கியுள்ளேன் .

இஸ்ரேலில் இலங்கைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாதப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் வீடு சார்ந்த பராமரிப்பு, ஹோட்டல்கள், உணவகங்கள், நிர்மாணம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இலங்கைப் பணியாளர்களுக்கு வரும் நாட்களில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப் பெறவுள்ளன.


அவ்வாறே இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புக்கள் நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும். இவை ஒருபோதும் எனது தனிப்பட்ட இலாபத்துக்காக பயன்படுத்தப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »