Our Feeds


Saturday, March 30, 2024

ShortNews Admin

ஆறாவது நாளாகத் தொடரும் கல்முனை போராட்டம்..!


 கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் இன்று (30) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.


இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.


இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழரசு கட்சியின் முன்னாள் வேட்பாளர் செல்வராசா கணேஷ்ஷானந்தம் ஆகியோரும் பங்கேற்று இருந்தனர்.


இதன் போது நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல் எனவும் அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுரக்குவதற்கான செயற்பாட்டிற்கும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்ற செயலென தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டி இருந்தார்.


மேலும் இதே போன்றதொரு போராட்டம் கடந்த காலங்களில் இடம்பெற்ற போது மூன்று நாளில் முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக உயர்த்தி தருவோம் என பல அரசியல்வாதிகள் வாக்குறுதி வழங்கியதும், ராஜபக்ஷ அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய ஜனாதிபதி முன்னாள் பிரதமரமாக இருந்த காலத்தில் முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக உயர்த்தி தருவோம் என வாக்குறுதி வழங்கியதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன் தெரிவித்திருந்தார்.


மேலும் அமைச்சரவை அதிகாரம் கிடைக்கப்பெற்ற பிரதேச செயலகத்தில் இயங்கிய இரண்டு கிராம சேவகப்பிரிவுகளை தெற்கு பிரதேச செயலகத்தில் அனுமதியின்றி இயங்கச் செய்திருப்பதும் மனித உரிமை மீறல் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டி இருந்தார். அதற்கு உடந்தையாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சில அதிகாரிகள் செயல்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.


உள்நாட்டு அலுவலக அமைச்சினால் உப பிரதேச சீரகமாக இருந்து பிரதேச செயலகம் 1993ம் ஆண்டு அமைவ்வரவை அதிகாரம் கிடைக்கப்பெற்று இது ஒரு பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது இது உபதேச செயலமாக தரம் இரக்கப்பட்டதற்கான காரணம் என்ன? குறிப்பிட்ட சில இனத்தவர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக தமிழர்களுக்கான அந்த உரிமை மறுக்கப்பட வேண்டும் என்பதற்காக சில சூழ்ச்சிகள் இடம் பெறுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.


தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியைப் பெற்றுத் தராத இந்த பிரதேச செயலுக்குரிய அதிகாரங்களை பெற்று தர முடியாத அரசாங்கம் எவ்வாறு வடகிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »