Our Feeds


Monday, March 25, 2024

SHAHNI RAMEES

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று...

 

இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணத்தை உலக மக்கள் இன்று (25) காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை சந்திர கிரகணம் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பிற்பகல் சந்திரகிரகணம் ஏற்படுவதால் இலங்கையர்களால் அதனை காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »