Our Feeds


Friday, March 22, 2024

SHAHNI RAMEES

இலஞ்சம் கோரி இராஜங்க அமைச்சர் கொலை அச்சுறுத்தலாம் : பதவி விலகினார் சீநோர் தலைவர்!


கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த

தனக்கு மரண அச்சுறுத்தல் வழங்குவதாகவும் இலஞ்சம் கேட்பதாகவும் தெரிவித்து இலங்கை சி – நோர் (கப்பல் கட்டும் நிறுவனம்) தலைவர் பேராசிரியர் துலான் ஹெட்டியாரச்சி தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.


கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் வரும் சி – நோர் (Cey -Nor Foundation Limited) தொடர்ச்சியாக நட்டம் ஈட்டி வந்த நிலையில் தான் அதன் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியதாக தலைவர் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.


இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தனது ஆசன மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காக 10,000 ரூபா பெறுமதியான பொதிகளை வழங்குமாறும் சில நேரங்களில் பொதிகளை வாங்குவதற்கு பணம் கேட்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அத்தோடு தனக்கு நெருக்கமான 20 பேரை சி – நோர் (கப்பல் கட்டும் நிறுவனம்) நிறுவனத்துக்கு வேலைக்கு அனுப்பியுள்ளதாகவும் அமைச்சின் மூலம் அவர்களுக்கு சம்பளம் வழங்குமாறு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.



அத்தோடு தான் இந்த நிறுவனத்தை பொறுப்பெடுக்கும் பொழுது 5 கோடி ரூபா வங்கிக்கு செலுத்த வேண்டி இருந்ததாகவும் அதனை முழுமையாக செலுத்தி 80 இலட்சம் ரூபா இலாபம் ஈட்டும் அளவுக்கு நிறுவனத்தை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.


பைபர் உற்பத்திகளை மட்டுமே செய்த சி – நோர் நிறுவனம் சிவில் கட்டட நிர்மாண பணிகளிலும் பங்களிப்பை செலுத்தியாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு இந்திய அரச நிறுவனங்களோடு சேர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தில் சுமார் 29 கோடி ரூபாய்களை நிறுவன மேம்பாட்டுக்காக பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



எவராயினும் மரண அச்சுறுத்தல் மற்றும் கப்பம் கோருகின்ற விடயங்கள் குறித்து தன் மேல் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அமைச்சர் பியல் நிஷாந்த முழுமையாக மறுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »