Our Feeds


Friday, March 29, 2024

ShortNews Admin

திலிப ரொஷான் குமார கொலை – வழக்கு விசாரணை சி.ஐ.டிக்கு மாற்றம்..!


 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளரும் கரந்தெனிய பொதுச் சுகாதார பரிசோதகருமான திலிப ரொஷான் குமாரவின் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் பொதுச் சுகாதார பரிசோதகர் கொல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.



பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவுக்கமைய இந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன தலைமையில் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »