பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், உயர் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரச புலனாய்வு சேவைக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் வேறு நபர்களுக்கு தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத நபர்களுக்காக சுமார் ஐயாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.