Our Feeds


Monday, April 29, 2024

ShortNews Admin

காஸா மக்களுக்கான Children of Gaza Fund நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் 25 லட்சங்களை வழங்கினார் சகோதரர் ரஸ்மின் MISc



205 நாட்களை தாண்டி பாலஸ்தீன - காஸா பகுதி அப்பாவிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்பு போரில் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்காக இலங்கை அரசாங்கம் சார்பில் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட Children of Gaza Fund நிதியத்திற்கு 2.5 மில்லியன் - 25 லட்சங்கள் “மனித நேய மக்கள் அமைப்பு” சார்பில் சகோதரர் ரஸ்மின் MISc யினால் இலங்கை ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கிழக்க மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். 


காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அங்கு என்ன நடக்கிறது என்பதை தினமும் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் சகோதரர் ரஸ்மின் அவர்களின் பணியின் ஓர் அங்கமாகவே இந்தப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இலங்கை அரசின் காஸா சிறுவர் நிதியம் தொடர்பில் ஒவ்வொரு நாளும் வீடியோ வழியாக சகோதரர் ரஸ்மின் மக்களுக்கு தெளிவூட்டி வந்த நிலையில் பல ஊர்களும், பள்ளிவாயல்களும், நிறுவனங்களும் இணைந்து பல லட்சக் கணக்கான ரூபாய் பணங்களை ஜனாதிபதியிடமும் குறித்த வங்கிக் கணக்கிலக்கத்திலும் வழங்கியமை குறிப்பிடத் தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »