Our Feeds


Thursday, May 30, 2024

ShortNews Admin

2035 ஆண்டாகும்போது வறுமை நிலையை 10% வரை கொண்டு வருவதே எமது குறிக்கோள்

 

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் நம்பிக்கையான இலக்கைக் கொண்டிருந்தாலும், ஏனைய எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தை மாத்திரம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்

மேலும், நமது நாட்டில் இலக்குமயப்பட்ட சட்டக் கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படாமையே, பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், 2022 ஆம் ஆண்டில் அரச வருமானம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 8.3% ஆக இருந்தது. 2025ஆம் ஆண்டுக்குள் அதை 15%க்கும் அதிகமாகப் பேணுவதே எமது இலக்கு. இதன் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்க முடியும்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள மறுசீரமைப்புச் செயல்முறையால், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வறுமை நிலையை 2027 ஆம் ஆண்டுக்குள் 15% க்கு கீழேயும், 2035 ஆம் ஆண்டாகும்போது 10% வரை கொண்டு வருவதே எமது குறிக்கோள்.

இந்தப் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தின்படி, உள்ள சட்டத்திற்கு உட்பட்ட இலக்குமயப்பட்ட வேலைத்திட்டத்திற்கு தேவையான மறுசீரமைப்புகள் மற்றும் வேலைத்திட்டங்களை செயல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ளதுடன், நாம் அவற்றை தயக்கமின்றி நிறைவேற்றுவோம் என்பதையும் கூற வேண்டும்” என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »