Our Feeds


Sunday, May 12, 2024

ShortNews Admin

ஆப்கானிஸ்தானில் மழை – வெள்ளத்தில் சிக்கி 300 இற்கும் அதிகமானோர் பலி!

ஆப்கானிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 300

இற்கும் அதிகமானோர் உயிரிர்ந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


வெள்ளத்தால் ஆப்கானின் வடக்கு பிராந்தியத்திலுள்ள பக்லான், தாகர் மற்றும் பதக்ஷன் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பக்லானில் மட்டுமே ஒரே நாளில் 300இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐ.நாவின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பும், உலக உணவு அமைப்பும் தெரிவித்துள்ளன.


அதுமட்டுமன்றி பக்லானி ஜெயித் பகுதியில் மட்டும் 1,500 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக ஐ.நா. அவசரகால மீட்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை தலிபான் உள்துறை அமைச்சகம் கடும்மழை பாதிப்பை தேசிய பேரிடாக அறிவித்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »