Our Feeds


Friday, May 24, 2024

Zameera

60 சதவீத குழந்தைகள் தொலைபேசிக்கு அடிமை


 பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60 விதம் பேர் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி வைத்தியர்கள் குழுவொன்று இந்த கணக்கெடுப்பை நடத்தியதாக சமூக நிபுணர் டாக்டர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


இதில் பல குழந்தைகள் இரவில் சரியாக தூங்காமல் எப்போதும் கவலையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குழந்தைகள் கல்வியை சரியாகக் கற்பதில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார்.


தொலைபேசிக்கு அடிமையான குழந்தைகளுக்கு சர்க்கரை நோயிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களின் உடல் சரியாகச் செயல்படாததால் நீரிழிவு நோய் ஏற்படுகிறதென்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் வன்முறையாக நடந்து கொள்கிறார்கள் மற்றும் பெற்றோர்களால் இந்த நிலை காரணமாக அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.


அவசியமானால் எந்தவொரு குழந்தையும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு பெற்றோர்களை மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »