பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்தார்.