பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு அருங்காட்சியகத்தை கல்முனையில் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு அதன் கட்டிட நிர்மாணப்பணிகளுக்கான முதற்கட்ட வரைபடம் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் தலைமையில் கிழக்கிலங்கையின் சிறந்த பட வரை கலைஞர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களுடன் இந்த கட்டிட நிர்மாணப்பணி தொடர்பிலும், அந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு அருங்காட்சியகத்தில் அமையவுள்ள சிறப்பம்சங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அசீம், பொறியலாளர் அப்துல் ஹலீம் ஜௌஸி, கல்முனை மாநகர சபை கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் ஏ. பி. நௌபர் உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.