Our Feeds


Friday, May 17, 2024

ShortNews Admin

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

 

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் உட்பட 4 சந்தேக நபர்களை விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (17) தீர்பளித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி அன்று வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகளால் 2013 ஆம் ஆண்டு வெலிவேரி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதலில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு இராணுவ அதிகாரிகள் உட்பட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »