Our Feeds


Thursday, May 30, 2024

ShortNews Admin

ஈரான் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்தும் ஐநா நிகழ்வு - அவுஸ்திரேலியா அமெரிக்கா புறக்கணிக்க தீர்மானம்


 ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை அவுஸ்திரேலியா புறக்கணிக்கவுள்ளது.

ஈரான் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை அமெரிக்கா புறக்கணிக்கவுள்ளதாக  தெரிவித்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியாவும் புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கியநாடுகள் பொதுச்சபை நிகழ்வில் அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என உறுதியாக தெரியவருவதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானின் கசாப்புக்கடைக்காரன் என பல ஈரானியர்கள் தெரிவிக்கும் அஞ்சலி செலுத்தும் ஐநாவின் இன்றைய நிகழ்வை புறக்கணிக்கவேண்டிய தார்மீக கடமை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குள்ளது என  லிபரல் கட்சியின் கிளைரே சான்ட்லர் தெரிவித்துள்ளார்.

ரைசி அரசாங்கத்தின் கீழ் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களிற்கு அவுஸ்திரேலியா ஆதரவாகயிருக்கவேண்டும் இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் பெண்கள் யுவதிகள் என அவர்  தெரிவித்துள்ளார்.

இப்ராஹிம் ரைசி பல பதவிகளில் இருந்த காலத்திலேயே ஈரானில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன 1988 இல் ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் தாங்களும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர் என லிபரல் கட்சியின் கிளைரே சான்ட்லர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »