Our Feeds


Monday, May 27, 2024

ShortNews Admin

போலி மாணிக்கக் கற்களை விற்க முயன்ற ஆறு பேர் கைது

 

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 13.5 கோடி ரூபாவுக்கு 14 போலி மாணிக்கக் கற்களை விற்பனை செய்யச் சென்ற பெண் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலையடுத்து செயற்பட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையத் தளபதி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத் தளபதிக்கு அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு உத்தி வகுக்கப்பட்டு இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்பவர்களை போல அக்குழுவினருடன் தொடர்புக்கொண்டு சிநேகபூர்வமாக உரையாடிய பின்னர், மாணிக்கக் கற்களை ஆய்வு செய்துள்ளனர்.

இறுதியாக, 13.5 கோடிக்கு மாணிக்கக் கற்களை விற்க இந்தக் குழு விருப்பம் தெரிவித்த பின்னர் இக்குழுவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


ஒரு பெண்னையும் 5 ஆண்களையும் இவ்வாறு கைதுசெய்துள்ளார்கள். 


கைதுசெய்யப்பட்டவர்கள் 39-45 வயதுக்கு இடைப்பட்டவர்களாவார்கள். கைதுசெய்யப்பட்ட குழுவினரிடம் இருந்த 14 மாணிக்கக் கற்களும் மேலதிகமாக, மூன்று மோட்டார் சைக்கிள்கள், ஒரு டிஜிட்டல் தராசும், ஒரு பயணப்பெட்டியும் மற்றும் சிறிய மின்விளக்கு ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


பதினான்கு மாணிக்கக் கற்களில் இரண்டிற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் வழங்கப்பட்ட சான்றிதழும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் இந்த மாணிக்க கற்களுடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் கண்டிக்கு வந்துள்ளதுடன், அந்த மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »