ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளைத்
தவிர்ப்பதற்காக ரஷ்யாவுக்கு உதவியதால், மேலும் சில சீன நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் சீன இராஜதந்திரிகளுக்கு அறிவிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படாத ஐரோப்பிய தயாரிப்புகளை கொள்வனவு செய்து அவற்றை ரஷ்ய இராணுவ கொள்வனவாளர்களுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் சீன நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறியதற்காக, மூன்று பிரதான சீன நிறுவனங்களும் ஹொங்காங்கில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனமும் கடந்த பெப்ரவரி மாதத்தில் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.