Our Feeds


Monday, May 20, 2024

ShortNews Admin

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

 

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த ஜனாதிபதி மற்றும் அவருடன் பயணித்த ஏனையவர்களுக்காக 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி அறிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் நேற்று (19) விபத்துக்குள்ளானது.

இதேவேளை, ஈரான் ஜனாதிபதியின் திடீர் மரணத்திற்கு ஹமாஸ் அமைப்பும் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பாக ஈரான் மக்களுடன் வருத்தம் மற்றும் வேதனையை பகிர்ந்து கொள்வதாக அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் முழு ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் தேசிய துக்கத்தை அறிவித்த பிறகு, சிரிய அரசாங்கமும் தேசம் மற்றும் ஈரான் அரசாங்கத்துடனான ஒற்றுமை, தோழமை மற்றும் பச்சாதாபத்திற்கு ஏற்ப மூன்று நாட்களுக்கு தேசிய துக்கத்தை அறிவித்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »