Our Feeds


Sunday, May 19, 2024

ShortNews Admin

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

 

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 15 வருடங்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு 10,000க்கும் மேற்பட்ட சொகுசு வாகன உதிரிபாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைகளின் பின்னர், மோசடியில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விசாரணை அதிகாரிகளுக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »