Our Feeds


Monday, May 20, 2024

ShortNews Admin

தேவையற்ற வீண் பேச்சை விடுங்கள்!

தேவையற்ற வீண் பேச்சை விடுங்கள்! இரு விவாதங்களுக்குமான திகதிகளை வழங்கியுள்ளோம்.


நமது நாட்டு மக்கள் ஒவ்வொரு காலப்பகுதியும் ஒவ்வொரு தலைவர்களுக்கு தமது வாக்குகளை இட்டு, நாட்டின் தலைமைத்துவத்தை வழங்கி ஆட்சி நடவடிக்கைகளை பார்த்துள்ளனர்.

இம்முறை சாதி, மதம், குலம், வர்க்கம், கட்சி வேறுபாடின்றி, அச்சமின்றி தன்னை தெரிவு செய்யுமாறும், ஐக்கிய மக்கள் சக்தியை தெரிவு செய்யுமாறும், எனது குழுவினரை தெரிவு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கிறேன். மக்களின் சேவகனாக, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இந்நாட்டின் வரலாற்றில் மகத்தான பணியை மேற்கொண்டுள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நாட்டிற்கு உழைக்கும் தலைவர்களும் குழுக்களுமே தேவை. வாய்சொல் தலைவர்களாலும், வாய்ச் சொல் குழுக்களாலும் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. வாய்ச் சொல் தலைவரோடு எந்நேரத்திலும் விவாதம் நடத்த தயார். கட்சியின் செயற்பாட்டு பிரதானியாக நளின் பண்டார இரு விவாதங்களுக்குமான திகதிகளை தற்போது வழங்கியுள்ளார். பொருளாதார குழுக்களுக்கிடையே விவாதம் மற்றும் தன்னோடு நேரடி விவாதம் என இரு விவாதங்களுக்குமான திகதிகளை வழங்கியுள்ளார். வாய்ச் சொல் வீரர்கள், மாயாஜாலங்கள், ஏமாற்றுகள் நாட்டுக்குத் தேவையில்லை. மக்களை தூக்கி விடும் ஆட்சியே தேவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை ஜன பௌர(மக்கள் அரண்) மக்கள் சந்திப்பு அம்பலாந்தோட்டை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றைய (19) தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.


எந்தக் கட்சியாக இருந்தாலும், விவாதங்களுக்கு போலவே, போட்டிக்கு வந்து நாட்டுக்காகப் பணியாற்ற முன்வருமாறு சவால் விடுக்கிறேன். தானும் தனது அணியும் மக்கள் சேவையில் முன்னிலை பெறுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.


வங்குரோத்தடைந்து கிடக்கும் நாட்டில், 220 இலட்சம் மக்களை அதிலிருந்து காப்பவர் யார் என்றே இந்நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நாட்டு மக்களுக்கு நாம் உதவி ஒத்தாசை செய்து வருகிறோம். கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் என வேறுபாடின்றி 220 இலட்சம் மக்களையும்  மீட்டெடுக்க நாம் பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்கள் ஊடக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிகாரம் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்து பல பணிகளை செய்துள்ளோம். மூச்சு, பிரபஞ்சம் நிகழ்ச்சிகள் இதற்கு நேரடி சான்றாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »