Our Feeds


Wednesday, May 22, 2024

ShortNews Admin

தயவு செய்து போரை நிறுத்துங்கள் – காஸா சிறுவனின் அலறல்

 

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பு தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பலியானதோடு நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தது.

போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போரை நிறுத்துங்கள் என பலஸ்தீன சிறுவனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த வீடியோவில் சிறுவன் கூறியதாவது:

“.. தயவுசெய்து போரை நிறுத்துங்கள். இங்கு மனிதர்களை பார்க்க முடிவதில்லை. எங்களுக்கென எதுவும் இல்லை. நாங்கள் இடம்பெயர்வு செய்யப்பட்டு வருகிறோம்.

காஸாவில் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். ஆனால் உலகம் எங்களிடம் பொய் சொல்லி வருகிறது. அவர்கள் இது ஆக்கிரமிப்பு எனக்கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையை சொல்வதில்லை..” என அழுதபடியே கூறுகிறார்.

போரை நிறுத்துங்கள் எனக்கூறும் காஸா சிறுவனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »