Our Feeds


Wednesday, May 22, 2024

ShortNews Admin

சவுதி அரேபிய வரலாற்றில் முதல் முறையாக.... நீச்சல் உடை அணிந்த மாடல்களின் “பேஷன் சோ”



சவுதி அரேபியாவில் முதல் முறையாக நீச்சல் உடை அணிந்த மாடல்களின் ஃபேஷன் ஷோ ஒன்று இடம்பெற்றுள்ளது.


சவுதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு இஸ்லாமியர்களின் புனித நகரங்கள் உள்ளன.


அங்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வருகிறார்கள். இந்நிலையில், தற்போது சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அந்த நாட்டில் பேஷன் ஷோவை நடத்துகிறார். இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.


'REDSEA' - ஃபேஷன் வீக்


'REDSEA' ஃபேஷன் வீக்கில் மொராக்கோ வடிவமைப்பாளர் யாஸ்மினா குன்சல் வடிவமைத்த ஆடைகளை மாடல்கள் அணிந்திருந்ததுடன் அனைவரின் கவனத்தையும் அவர்கள் ஈர்த்திருந்தனர் என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.


சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இதற்கு முழு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அரசியல் ரீதியாக மாத்திரமன்றி சமூகத்திலும் பாரிய மாற்றங்களை கொண்டுவருவதை தனது இலக்காக 2030ஐ நிர்ணயித்துள்ளார்.


இந்த ஃபேஷன் ஷோ செயின்ட் ரெஜிஸ் ரெட் சீ ரிசார்ட்டில் மிகவும் ஆடம்பரமாக இடம்பெற்றிருந்தது. ரெட் சீ குளோபல் என்பது சௌதி அரேபியாவில் மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


தங்கள் நாட்டின் ஜிடிபியில் 1.4% பங்கு, ஃபேஷன் துறைக்கு சொந்தமானது என்றும் சுமார் இரண்டரை இலட்சம் பேர் இதில் வேலை செய்வதாகவும் சௌதி ஃபேஷன் கமிஷன் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »