Our Feeds


Tuesday, May 21, 2024

SHAHNI RAMEES

ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது. - சஜித் பிரேமதாச




அதிமேதகு மொகமட் மொக்பர்

பதில் சனாதிபதி

ஈரான் இஸ்லாமிய குடியரசு.


அதிமேதகு சனாதிபதி அவர்கட்கு,


ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியும் ஈரான் மக்களின் அன்புக்குரிய தலைவருமான அதிமேதகு இப்ராஹிம் ரைசி அவர்களின் அகால மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிமேதகு ரைசி அவர்கள் தனது தொலைநோக்கு பார்வை மற்றும் அறிவு, ஆற்றலினால்  தனது நாடு மற்றும் மக்கள் மீது காட்டிய ஆழ்ந்த அன்பு அத்துடன் அவர் தனது கடமைகளைச் செய்த சிந்தனைத் தன்மை ஆகியவற்றின் காரணமாக ஒரு சிறந்த தலைவராக இருந்தார்.


இந்த சோகம் ஈரானுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்திற்கும் அதற்கு அப்பாலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை பிரதிபலிக்கிறது. ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது.


ஈரானின் நீண்ட மற்றும் புகழ்பெற்ற வரலாற்றில் ஈரானியர்கள் நிறைய பொறுமையுடன் வாழ்ந்துள்ளனர். மேலும் அன்னாரின் மறைவுக்குப் பின்னர் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆன்மீகத் தலைவரிடமிருந்து உறுதியான மற்றும் அசைக்க முடியாத தலைமை தேவையான தருணமிது. துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் தேவையான வழிகாட்டுதலை அவர் நிச்சயமாக வழங்குவார்.


மேதகு இப்ராஹிம் ரைசி சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார், இலங்கையும் எனது மக்களும் அவரது அன்பான முகத்தை நேரடியாகப் பார்க்க முடிந்தது.


மிகவும் இக்கட்டான இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் ஈரான் மக்களுடன் நமது எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் நாம் ஐக்கியமாக இருப்போம்.


பாரசீகர்களின் வரலாற்றில் அழியாத நினைவைக் குறிக்கும் அன்னாரது நீடித்த மரபுரிமையில் ஈரானியர்கள் ஆறுதல் பெறட்டும்.


சஜித் பிரேமதாச (பா.உ.)

இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்

மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »