Our Feeds


Thursday, May 16, 2024

ShortNews Admin

ரஷ்யா பிரச்சினைக்கு ஜனாதிபதியின் அவசர ஆலோசனை


 விரைவில் ரஷ்யாவிற்கு தூதுக்குழுவை அனுப்புமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

இன்று (16) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் தூதுவர் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவை அனுப்புமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக தெரிவித்தார்.

ரஷ்யாவுக்குச் சென்றவர்களின் தகவல்களை சேகரிக்க பாதுகாப்பு அமைச்சின் உடனடி தொலைபேசி இலக்கம் தற்போது செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய – உக்ரேன் போரில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்கள் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

யுத்தத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்ய உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்கள் தொடர்பில் ரஷ்ய தூதுவரிடம் கோரிக்கைகளை முன்வைத்ததாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன், அரசாங்கத்தின் தேவையின் அடிப்படையில் இந்தப் போர்வீரர்களை அழைத்து வர தலையிட முடியும் எனவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »