பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது சங்கம் ஆதரவளிக்காது என அதன் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்தார்.