Our Feeds


Monday, May 20, 2024

ShortNews Admin

தானியங்கி வானிலை அமைப்புகளில் மின்கலங்களின் ஆயுட்காலம் நிறைவால் அறிக்கை பெறுவதில் சிறமம்

 

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வானிலை ஆய்வுத் துறையால் நிறுவப்பட்ட 38 தானியங்கி வானிலை அமைப்புகளில் 11 மின்கலங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து செயலிழந்துள்ளன.


ஜப்பானிய உதவியின் கீழ் 570 மில்லியன் ரூபா செலவில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.


மஹாஇலுப்பல்லம, வாகொல்ல, செவனகல, பொலன்னறுவை, அரலகங்வில, பலாங்கொடை, சிறிகடூர, அகுனுகொலபெலஸ்ஸ, தெனிய, தவலம, குடவ ஆகிய இடங்களில் உள்ள 11 தானியங்கி வானிலை நிலையங்களில் கடந்த வருடம் (2023) ஜூலை 11ஆம் திகதியிலிருந்து மின்கலங்கள் செயலிழந்துள்ளதாகவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது. 


2019 முதல் 2022 வரை இந்த வானிலை நிலையங்களின் பராமரிப்பு அதிர்வெண் முறையே 69 சதவீதம், 93 சதவீதம், 92 சதவீதம் மற்றும் 85 சதவீதமாகக் காணப்பட்டது.


2010 மற்றும் 2019 க்கு இடையில் இந்த உபகரண அமைப்பின் உதிரிப் பாகங்களுக்காக 123 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.


இந்தத் தானியங்கி வானிலை அமைப்புகள் வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு, காற்றின் வேகம் மற்றும் திசை, காற்று மற்றும் சூரிய கதிர்வீச்சு ஆகியவற்றை அளவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »