Our Feeds


Monday, June 10, 2024

SHAHNI RAMEES

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் - சஜித் வாக்குறுதி

 



பலவேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு

வழிகளில் வெவ்வேறு பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே கூறிவருகின்றது. சர்வதேச தொழிலாளர் தினத்தன்றும் அந்த உறுதிமொழி வழங்கப்பட்டது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


 


உயர் சட்டப் புத்தகத்திலுள்ள 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்படும். நாட்டின் வடக்கு, கிழக்கு, மேல் என 9 மாகாணங்களிலும் உள்ள மக்களுக்கும் இந்த வாக்குறுதியை வழங்குகிறேன். இதனை நடைமுறைப்படுத்தத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


 


இதன் மூலம் இப்பிரதேச மக்களின் அரசியல், மத, சமூக, கலாசார உரிமைகள் வழங்கப்படும். நாட்டின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளே உள்ளடங்கியுள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த அத்தியாயத்தை விரிவுபடுத்தி இதில் பொருளாதார, சமூக, மத, சுகாதார, கல்வி உரிமைகள் வழங்கப்படும்.


 


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 225 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கிளிநொச்சி, பாரதி வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 09 ஆம் திகதி இடம்பெற்றது.


 


இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.



220 இலட்சம் பேரும் 1st class citizen 



இந்நாட்டில் 1st class citizens, 2nd class citizen, 3rd class citizen என்ற வகைப்பாடுகள் எதுவும் இல்லை. எல்லோரும் ஒன்று போல் சமமானவர்களே. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் உட்பட 220 இலட்சம் குடிமக்களும் 1st class citizen ஆகும். இதற்கான ஏற்பாடுகள் இல்லாததால், நிர்வாகத் துறையில் சட்டம் ஒழுங்கும் துறையில் ஏற்பாடுகளை மேற்கொண்டு யதார்த்தமாக நடைமுறைப்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.


 


நாம் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம்.


 


13 ஆவது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள், மேலே பார்த்துக் கொண்டு இருத்தல், கேட்காதது போல் நடந்து கொள்ளுதல், பிற தலைப்புகளைக் கொண்டு வருதல், பயப்படுதல் மற்றும் வெட்கப்படுதல் போன்ற அரசியல் சந்தர்ப்பவாதிகளாக நடந்து கொண்டாலும், தான் நேராகப் பேசும் நபர் என்றபடியால், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன்.


 சிங்களவர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும், பர்கர்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் ஒன்றாய் கைகோர்த்து, ஒரு தாயின் பிள்ளைகள் போல் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபடுமாறு தெரிவித்தார்.


ஏனையோர் பணியாற்றாத போது நாம் பணியாற்றி வருகிறோம்.



பல்வேறு அரசியல்வாதிகள் வடக்கிற்கு வந்து அரசாங்கத்தின் வளங்களை பகிர்ந்தளித்தாலும், பல்வேறு நன்கொடையாளர்கள் வழங்கிய உதவிகளையே நான் வழங்கி வருகிறேன். எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய கட்சிகள் பணியாற்றாது இருந்தாலும், தானும் தனது குழுவும் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.


 


சிங்களம் மட்டுமே, தமிழ் மட்டுமே என சொல்லிக் கொண்டு தத்தமது வாக்குகளை அதிகரித்துக் கொள்ள முயலும் அரசியல்வாதிகளிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்து சிந்திக்காமல் தமது வாக்குகள் குறித்து சிந்திப்பவர்களே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எனது வாக்குகளை அதிகரித்துக் கொள்ளாமல், பிள்ளைகள் மற்றும் பாடசாலைகளுக்கு பெறுமானத்தை கூட்டிக் கொள்ளும் பணியையே முன்னெடுத்து வருகிறேன். எந்த இனத்துக்குச் சொந்தமான, எந்த மதத்துக்குச் சொந்தமான பிள்ளைகளாக இருந்தாலும் எந்தவித பேதமுமின்றி அனைத்துப் பிள்ளைகளையும் ஒன்றாகக் கருதி அவர்களின் எதிர்காலத்திற்கான முதலீடாகவே இந்த பணியை செய்து வருகிறேன் என்றார்.


கிளிநொச்சி மாவட்டத்தை கட்டியெழுப்போம்.


அடிமட்டத்தில் இருந்து பெறப்படும் யோசனைகளின் ஊடாக வடமாகாணத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாத வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய இந்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் தலைவரான பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்து தருவேன் என உறுதியளிக்கிறேன்.



இப்பிரதேசத்தில் தனியான கைத்தொழில் பேட்டைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்துத் தரப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



இந்தியாவில் உள்ள IIM, IIT போன்ற கல்வி நிறுவனங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு எமது நாட்டிலும் இதுபோன்ற நிறுவனங்களை நிறுவி, சர்வதேச தரத்தில் அமைந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ நிறுவனங்கள் நிறுவப்படும். இற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பைக் பெற்றுக் கொள்ளுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »