Our Feeds


Monday, June 24, 2024

SHAHNI RAMEES

16 வயதுடைய பாடசாலை மாணவி கூட்டுப் பலாத்காரம்...!

 

16 வயதுடைய பாடசாலை மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று (23) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.



இதேவேளை இச்சம்பவத்திற்கு உதவிய மற்றுமொருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
class="separator" style="clear: both; text-align: justify;">


16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர், அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடந்த 21ஆம் திகதி ஹங்வெல்ல ஜல்தர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.



எம்புல்கம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் குறித்த சிறுமி தனது காதலன் வீட்டில் அவருடன் உடலுறவு கொண்டதாகவும், பின்னர் ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மயானம் ஒன்றில் காதலனின் நண்பர்கள் இருவர் அவருடன் உடலுறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.



பின்னர், அவர்களது நண்பர்கள் மேலும் 3 பேர் அங்கு வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.



பின்னர், சிறுமி வீட்டிற்கு செல்ல அந்த இளைஞர்களிடம் பணம் கேட்டுள்ள நிலையில், 40 ரூபாயை மட்டுமே கொடுத்துள்ளனர்.



எனினும், அவர்கள் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஆடிகல சந்திக்கு அழைத்து வந்துள்ளனர்.



அப்போது வீட்டுக்கு செல்ல முடியாமல் அழுது கொண்டிருந்த சிறுமியை இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சந்தித்தனர்.



நேற்று (22) இரவு இச்சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் பிரதான சந்தேகநபரும் சிறுமியின் காதலனும் அடங்குகின்றனர்.



கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பிரியங்கா மத்துமபடபெந்திகே இன்று ஹங்வெல்ல பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.



மேலும், சம்பவத்திற்கு உதவிய மற்றுமொருவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதேவேளை, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் கைத்தொலைபேசியை சோதனையிட்ட போது, சம்பவத்தின் பின்னர் அவர் தனது காதலனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.



அதில் "உங்கள் இருவருக்கும் ஒன்றும் ஆகாது". என பதிவிடப்பட்டுள்ளது.



இந்தச் குறுஞ்செய்தி ஊடாக சிறுமி தனது காதலனையும், சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞனையும் காப்பாற்ற எண்ணியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் ஆலோசனையின் பேரில் நுகேகொடை பிரிவு குற்ற விசாரணை பிரிவினரும் ஹங்வெல்ல பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »