Our Feeds


Sunday, June 2, 2024

ShortNews Admin

நாட்டில் உள்ள 28 கடற்கரைகளை "நீலக் கொடி கடற்கரையாக" மாற்ற திட்டம்! - பிரசன்ன ரணதுங்க

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இந்நாட்டில் உள்ள 28 கடற்கரை பகுதிகளை 28 நீலக் கொடி கடற்கரைப் பகுதிகளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக உனவட்டுன, பெந்தோட்டை, பாசிக்குடா மற்றும் அறுகம்பே ஆகிய கரையோரப் பகுதிகளில் நீலக்கொடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுற்றுலா அமைச்சின் ஆலோசனையின் பேரில் கடற்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அறுகம்பே மற்றும் பாசிக்குடா நீலக் கொடி கடற்கரை பகுதித் திட்டத்துக்காக சுற்றுலா அமைச்சு ஏற்கனவே 32 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கு உரிய பணம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, பாசிக்குடா கடற்கரையை இந்த ஆண்டு இறுதிக்குள் நீலக்கொடி கடற்கரையாக மாற்ற முடியும் என்றும் கூறியது.

இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட கரையோர வலயங்களில் நீலக்கொடி கடற்கரைகளின் அளவுகோல்களை பூர்த்தி செய்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்கவும், அதன் மூலம் அந்த வலயங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான வசதிகளை வழங்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம்  சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன் அந்தந்தப் பகுதிகளில்  உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தையும்  உயர்த்த முடியும்.

கடற்கரைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பதற்கு மற்றும் அவர்களுடைய ஆரோக்கியத்தை பேணுவதற்காக செயல்படுத்தப்படுகின்ற நீலக் கொடி கடற்கரை சான்று வழங்கும் திட்டம் ஒன்றை சுற்றுச் சூழலை உலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கிடையில் பிரபல்யமான சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான ஒரு  வகையாகும். நீலக் கொடி சான்றிதழ் கிடைப்பது தரமான தண்ணீர், சூழல் முகாமை, சூழல் கற்றல் தகவல்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு எனும் 4 தலைப்புகளின் கீழ் 32 நியமங்களைப் பூர்த்தி செய்த கடற்கரைகளாகும். கடற்கரை மற்றும் கடல் சூழல் பாதுகாப்பை பேணியபடி மாசடைதல் இல்லாமல் அந்த இடத்தை வைத்திருப்பதன் மூலமாக சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி போன்ற துறைகளில் நிலைபேறான தன்மையை பாதுகாக்க முடியும் என்பது இந்த நீலக் கொடி திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.

இந்த திட்டம் தற்போது உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பாட்டில் உள்ளது. இந்த சான்றிதழ்கள் டென்மார்க் சுற்றுச்சூழல் ஆய்வு நிதியத்தினால் வழங்கப்படுகின்றன. நீலக்கொடி கடற்கரையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டுமாயின், இலங்கையில் நிதியத்தின் அங்கத்துவத்துடன் கூடிய அமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டும்.

இதன்படி, அந்த நிதியத்தில் அங்கத்துவம் பெறுவதற்கான அமைச்சரவை அனுமதியை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை கடந்த வாரம் பெற்றுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இதன் விளைவாக, டென்மார்க் சுற்றுச்சூழல் நிதியத்தின் உறுப்பினராக இரண்டு ஆண்டுகளுக்கு மீபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »