Our Feeds


Friday, June 7, 2024

Zameera

அலுவலக புகையிரதங்கள் அதிகம் பாதிக்கப்படாது


 பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இன்ஜின் சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த தொழில் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்து புகையிரத நிலையங்களில் இரண்டின் சாரதிகள் மாத்திரமே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் காரணமாக லோகோமோட்டிவ் ரயில் இயங்காது எனவும் லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக காலை வேளையில் இயங்கும் அலுவலக புகையிரதங்கள் அதிகம் பாதிக்கப்படாது எனினும் இன்று பிற்பகல் இயங்கும் அனைத்து புகையிரதங்களும் இரத்து செய்யப்படலாம் என எஸ்.ஆர்.சி.எம் சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 84 ரயில் சாரதிகளின் பதவி உயர்வு பிரச்சினையின் அடிப்படையில் அந்த சாரதிகளே இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தொழில்சார் நடவடிக்கையானது லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, சங்கத்தின் செயலாளரின் முடிவின்படி வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது என்று சங்கத்தின் தலைவர் சந்தன லால் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »