கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ
பகுதி இன்று(08) காலை 10 மணி முதல் இடைக்கிடையே தற்காலிகமாக மூடப்படவுள்ளது.வீதியின் இருமருங்கிலுமுள்ள மண்மேடுகள் மற்றும் அபாய நிலையிலுள்ள கற்பாறைகளை அகற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கற்பாறையொன்றை வெடிக்கச் செய்வதற்காக இரசாயன பொருட்கள் உபயோகிக்கப்படவுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகளையும் இந்த மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.