Our Feeds


Tuesday, June 11, 2024

Zameera

ரயில் சேவைகள் வழமை போன்று இயங்கும்


 இன்று (11) முதல் ரயில் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (10) பிற்பகல் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 6ம் திகதி முதல் புகையிரத சாரதிகள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் புகையிரத பொது முகாமையாளர் எழுத்துமூலமாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் ரயில் வழமை போன்று இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்திபோலகே தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்காலத்தில் ரயில் சேவையை மறுசீரமைப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ரயில்வேயை மறுசீரமைக்கும் அரசின் திட்டத்தை தோற்கடிப்போம் என அதன் இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக 1,000,000 கையொப்பங்களைப் பெற்றதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லத் தயார் என தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

நாளை (12) நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் கபில பெரேரா தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »