Our Feeds


Friday, July 5, 2024

Admin

பிரித்தானிய தேர்தலில் ஆட்சி மாற்றம் | 14 ஆண்டுகளின் பின் ஆட்சியை கைப்பற்றியது தொழில் கட்சி



பிரித்தானிய பொதுத் தோ்தலையொட்டி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 4) வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.


இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிற் கட்சி வெற்றியீட்டியுள்ளது.


இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.


புதிய அரசை தோ்வு செய்யும் இத்தோ்தலில், உள்ளூா் நேரப்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமாா் 4.6 கோடி வாக்காளா்களுக்காக 40,000 வாக்குப் பதிவு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச் சீட்டு முறையில் தோ்தல் நடைபெற்றது.


ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை என்ற நிலையில் அதற்கும் மேலான இடங்களை தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளது.


14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


2019ம் ஆண்டு தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பதவியேற்றார். அவருக்கு பின்னர் ரிஷி சுனக் பிரதமராக தேர்வானார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »