Our Feeds


Tuesday, July 9, 2024

Sri Lanka

அக்கரைப்பற்று முஸ்லிம் பாடசாலை பெயர் மாற்ற விவகாரம்: அழுத்தங்களை பிரயோகித்தாரா கிழக்கு ஆளுனர் செந்தில்?
ஐ.சுபைதர்

அக்­க­ரைப்­பற்று அஸ்­ஸபா கனிஸ்ட வித்­தி­யா­லய பெயர் மாற்ற விவ­கா­ரத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­டமான் தேவை­யற்ற அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தாரா என்ற சந்­தேகம் முஸ்லிம் சமு­கத்தின் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது.


இப்­பா­ட­சா­லையின் பெயரை லீடர் அஸ்ரப் கனிஸ்ட வித்­தி­யா­லயம் என மாற்­று­மாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செய­லாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசா­நா­யக்க 2024.01.02ம் திகதி வழங்­கிய கடி­தத்தின் மூலம் இச்­சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது.


“கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்­க­ளினால் இன்று எனக்கு நேர­டி­யாக வழங்­கப்­பட்ட பணிப்­பு­ரைக்கு அமை­வாக இப்­பா­ட­சா­லையின் பெயர் மாற்­றப்­ப­டு­கின்­றது” என்றே கல்வி அமைச்சின் செய­லாளர் இக்­க­டி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.


இந்த பெயர் மாற்­றத்தை ஏற்றுக் கொள்­ளாத பாட­சாலைச் சமுகம் இது தொடர்­பாக கல்­முனை மேல் நீதி­மன்­றத்தில் EP/HCK/Writ/417/2024 ஆம் இலக்­கத்தில் வழக்குத் தாக்கல் செய்து இப்­பெயர் மாற்­றக்­கட்­ட­ளைக்கு எதி­ராக இடைக்­காலத் தடை உத்­த­ரவும் பெற்­றுள்­ளது. இந்த விட­யத்தில் பாட­சாலை சமு­கத்­திற்கு தேவை­யற்ற பணச் செலவும், மன­ உ­ளைச்­சலும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.


இந்த வழக்கு விட­யத்தில் அரச சட்­டத்­த­ர­ணிகள் கொடுப்­ப­னவு, வாகன செலவு, காகி­தா­திகள் செலவு என அர­சாங்­கத்­திற்கும் பல்­வேறு தேவை­யற்ற செல­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.


பாட­சாலைப் பெயர் மாற்றம் ஆளு­நரின் அதி­கா­ரத்­திற்கு உட்­பட்­ட­தல்ல. அது கல்வி அமைச்­சுக்கு உரி­யது. அதற்­கென சில நட­படி முறைகள் உள்­ளன. எனவே இங்கு ஆளுநர் தேவை­யற்ற தலை­யீ­டு­களைச் செய்­துள்ளார் என்­பதே இவ்­வ­ழக்­கிற்­கான வழக்­கெழு கார­ணி­யாக உள்­ள­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது.


உண்­மையில் இந்த விட­யத்தில் ஆளுநர் தலை­யீடு செய்­தாரா அல்­லது அவ­ரது பெயர் இங்கு திட்­ட­மிட்டு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதா என்ற சந்­தே­கத்­தையும் சிலர் எழுப்­பு­கின்­றனர். ஆளுநர் கிழக்கு மாகாண அமைச்சுச் செய­லா­ளர்கள் நிய­மன விட­யத்தில் முஸ்லிம் விரோதப் போக்­குடன் செயற்­ப­டு­கின்றார் என்ற குற்­றச்­சாட்டு ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்­டது. அதற்கு வலுச் சேர்த்து ஆளுநர் – முஸ்லிம் சமுக விரி­சலை மேலும் அதி­க­ரிப்­ப­தற்­கான ஒரு முயற்­சி­யாக இது இருக்­குமோ என்­பதே இச்­சந்­தே­கத்­திற்­கான கார­ண­மாகும்.


ஏனெனில் எந்த ஒரு அதி­கா­ரியும் தாபன விதிக்­கோவை, நிதிப்­பி­ர­மா­னங்கள், சுற்­ற­றிக்­கைகள் மற்றும் நாட்டில் அமுலில் உள்ள சட்ட திட்­டங்­க­ளுக்­க­மை­யவே பணி­பு­ரிய வேண்டும். வேறு யாரும் சொன்­னார்கள் அல்­லது அழுத்தம் கொடுத்­தார்கள் என்ற அடிப்­ப­டையில் பணி­பு­ரிய முடி­யாது. அப்­படி செயற்­ப­டு­வது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டிய குற்­ற­மாகும்.


இதனை தாபன விதிக்­கோவை தொகுதி II அத்­தி­யாயம் XLVII ஆம் பிரிவு 8.1, 8.2, 8.3 என்­பன தெளி­வாகக் குறிப்­பி­டு­கின்­றன.


நிலைமை இவ்­வா­றி­ருக்க இலங்கை நிர்­வாக சேவையின் சிரேஸ்ட அதி­கா­ரி­யான கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செய­லாளர் தாபன விதிக்­கோவை ஏற்­பா­டு­களைப் புறந்­தள்ளி ஆளு­நரின் பணிப்­பு­ரைக்­க­மைய பாட­சா­லையின் பெயரை மாற்­று­வ­தாக ஏன் கடிதம் வழங்­கினார் என்­பது இங்கு எழு­கின்ற நியா­ய­மான கேள்­வி­யாகும்


“ஆளுநர் தனக்கு நேர­டி­யாக வழங்­கிய பணிப்­பு­ரைக்­க­மைய’ என்று செய­லாளர் இக்­க­டி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ள­மையால் ஆளுநர் எழுத்து மூலம் இப்­ப­ணிப்­பு­ரையை விடுக்­க­வில்லை என்­பது தெரி­கின்­றது. அப்­ப­டி­யாயின் வாய்­மொழி பணிப்­பு­ரைக்­க­மைய ஒரு சிரேஸ்ட நிர்­வாக சேவை அதி­காரி செயற்­ப­ட­லாமா, தாபன விதிக்­கோவை ஏற்­பா­டுகள் இவ­ருக்கு தெரி­யாதா என்­பதும் கவ­னத்தில் கொள்ள வேண்­டிய ஒரு விட­ய­மாகும்.


உண்­மையில் மேல் மட்­டங்­களின் பணிப்­பு­ரையை ஏற்றுச் செயற்­ப­டு­கின்ற ஒரு அதி­காரி இருக்­கின்ற சட்­ட­திட்­டங்­க­ளுக்­க­மை­யவே அதற்­கான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுப்பார். இது தான் வழமை. இதன் மூலம் குறித்த அதி­காரி மேல் மட்­டத்­தையும் திருப்திப்படுத்­தலாம். தானும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வதில் இருந்து தப்­பிக்­கலாம்.


இங்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செய­லாளர் வழங்­கிய கடி­தத்தைப் பார்க்கும் போது அதில் ஆளு­நரின் பெயர் சேர்க்­கப்­பட்ட விதம் வேண்­டு­மென்று ஆளு­நரின் பெய­ருக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்த எடுக்­கப்­பட்ட ஒரு முயற்­சி­யாக இருக்­குமோ என்ற சந்­தே­கத்­தையும் தோற்­று­விக்­கின்­றது.


எது எப்­படி இருப்­பினும் இங்கு இரண்டு விட­யங்கள் இருக்­கின்­றன. ஆளுநர் தொடர்ந்து முஸ்லிம் சமு­கத்தைப் புறக்­க­ணிப்­ப­தோடு முஸ்லிம் சமுக விட­யத்தில் தேவை­யற்ற தலை­யீ­டுகள் செய்­கின்­றாரா என்­பது ஒன்று.


ஆளுநர் தொடர்­பாக முஸ்லிம் சமு­கத்­திலே தப்­ப­பிப்­பி­ரா­யத்தை மேலும் உரு­வாக்கி ஆளு­நரை நிய­மித்த ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான ஒரு கருத்­தேற்­றத்தை முஸ்லிம் சமு­கத்தில் வளர்த்து எதிர் வரு­கின்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் வாக்­குகள் ஜனா­தி­ப­திக்கு அளிக்­கப்­படும் வீதத்தை கணிச­மாகக் குறைக்கும் ஒரு செயற்­பாடா என்­பது இரண்­டா­வது.


எனவே, இங்கு ஆளுநர் தான் இந்த விட­யங்­களை கவ­னத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எழும் சந்­தே­கங்­களை நிவர்த்­திக்க வேண்டும். தான் வழங்­காத ஒரு பணிப்­பு­ரைக்கு தனது பெயரை இந்த அதி­காரி பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் அவ­ருக்­கெ­தி­ராக ஆளுநர் உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.


தாபன விதிக்­கோவை தொகுதி II அத்­தி­யாயம் XLVII ஆம் பிரிவு 8.3 க்கமைய இந்த அதி­கா­ரிக்­கெ­தி­ராக நட­வ­டிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அதேபோல இந்த அதிகாரியின் இந்த நடவடிக்கை மூலம் அரசுக்கு ஏற்பட்ட நட்டங்களை 1993.07.21 ஆம் திகதிய திறைசேரி சுற்றிக்கைக் கடித இல. எப்.ஐ.என்.320 க்கமைய இந்த அதிகாரியிடமிருந்து மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கிழக்கு மாகாணத்தின் நிர்வாகச் சீர்கேடுகளை சீர்செய்யவும் முடியும்.


இதேபோல இந்த நிர்வாகச் சீர்கேட்டு விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய பாரிய கடப்பாடு பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கணக்காய்வு திணைக்களத்திற்கும் கூட உண்டு.- Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »