Our Feeds


Thursday, July 11, 2024

Admin

பணிக்கு சமூகமளிக்காத ரயில்வே ஊழியர்களுக்கு சிவப்பு கடிதம் !



பணிப்பகிஷ்கரிப்பின் போது பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் சேவையில் இருந்து விலகியதாக கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை கடைப்பிடிக்காது பணிப்புறக்கணிப்பில் ஈடும் ரயில் நிலைய அதிபர்களுக்கு இந்த கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று (11) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்களுக்கு ரயில்வே பொது முகாமையாளரால் அந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »