Our Feeds


Monday, July 15, 2024

Admin

பியுமியை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!



பணமோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நடிகை பியுமி ஹன்சமாலி எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

ஆனால், பியுமி ஹன்சமாலிக்கு எதிரான விசாரணைகள் தடையின்றி தொடரலாம் என்றும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியுமி ஹன்சமாலி தம்மை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (15) பரிசீலிக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா முன்னிலையில் அழைக்கப்பட்டது.

விசாரணைகள் முடியும் வரை மனுதாரரை கைது செய்ய மாட்டோம் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதன்படி, மனு மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் செப்டம்பர் 20-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »