Our Feeds


Wednesday, July 24, 2024

Admin

SJB பக்கம் தாவும் 35 MPக்கள் - புதிய கூட்டணியும் தயார்



பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் அதிக பிரதிநிதித்துவத்துடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


புதிய கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிடுகின்றார்.


எதிர்வரும் எட்டாம் திகதி புதிய கூட்டணியை வெளியிடவுள்ளதாக தெரிவித்த அவர், அதற்காக ஏனைய கட்சிகளை சேர்ந்த முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இணையவுள்ளதாகவும் தெரிவித்தார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »