எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி அறிமுகப்படுத்தப்பட்ட 196 சின்னங்களில், இருபத்தி எட்டு விலங்கு சின்னங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சொக்லேட், பாண், கேக், டோஃபி, திராட்சை கொத்து, பழக்கூடை, கேரட், ஐஸ்கிரீம், சோளம், வட்டக்காய், முந்திரி பருப்பு, ஆப்பிள் பழம், பலாப்பழம், மாம்பழம், ஜம்பு பழம், அன்னாசி பழம், தேங்காய் போன்ற சின்னங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தவிர கோப்பு (பைல்), பறவை இறகு, சிசி டிவி கெமரா, இடுப்பு பெல்ட், கேஸ் சிலிண்டர், ஊஞ்சல், கெட்டபோல், குதிரை லாடம், கையடக்க தொலைபேசி போன்ற சிறப்பு சின்னங்களும் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Monday, August 12, 2024
ஜனாதிபதி தேர்தலில் 196 சின்னங்கள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »