Our Feeds


Friday, August 23, 2024

SHAHNI RAMEES

2,000,000 (இருபது இலட்சம்) ரூபாய் செலவில் கண்டி உக்குரஸ்ஸபிடிய மீரா வித்தியாலய கட்டடத்தின் கூரை புனரமைப்பு திட்டம்


 2,000,000 (இருபது இலட்சம்) ரூபாய் செலவில் கண்டி

உக்குரஸ்ஸபிடிய மீரா வித்தியாலயத்தில் அமைக்கப்படும் பிரதான கட்டடத்தின் முழுமையான  கூரை புனரமைப்பு திட்டத்தின் ஆரம்பகட்ட நிகழ்வு…


மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது மட்டுமல்லாமல் சுகாதாரமான அடிப்படை வசதிகள் நிறைந்த வளமான சூழலை உருவாக்கி கொடுப்பதும் எமது கட்டாய கடமையாகும், என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், கண்டி மாவட்டத்தில் இருக்கும் பாடசாலைகளில் வளங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடைபெற்று வரும்,  எனது வேலைத்திட்டத்திற்கு அமைய கண்டி மாவட்டத்திற்கான பத்தாவது கட்ட வேலைத்திட்டம், 


ஜனாதிபதி செயலகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் ஊடாக “அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இஸ்திஹார் அவர்களது முயற்சியில் சுமார் இருபது இலட்சம்  2,000,000 ரூபாய் செலவில் கண்டி உக்குரஸ்ஸபிடிய மீரா வித்தியாலயத்தில் பிரதான கட்டடத்தின் முழுமையான கூரை புனரமைப்பு திட்டத்தின் ஆரம்பகட்ட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »