தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 24 மணிநேரத்திற்குள் மொத்தம் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு 39 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையங்களுக்கு 23 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
நேற்று அதிகாலை முதல் மாலை 4.30 மணி வரை 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.