தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் 2 பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்று (25) மதியம் போகமுவ பிரதேசத்தில் இருந்து தெதுரு ஓயாவில் குளிப்பதற்குச் சென்ற இவர்கள், நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதுடைய தாய் மற்றும் அவரது 9 வயது மற்றும் 5 வயதுடைய 2 மகன்களுமே இவ் அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.
இவர்கள் பெரகஹவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், தாயையும் மற்றைய குழந்தையையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.