ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.