Our Feeds


Saturday, August 17, 2024

Sri Lanka

வாக்காளர்களை பணத்திற்க்கு விற்க முடியாது!


நாட்டின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் பரிவர்த்தனை பணத்திற்கு விற்கக்கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள விடயங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

வாக்காளர்கள் நுகர்வோராக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »